ஐஞ்சிறு காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
அறம், பொருள், இன்பம் பெற்று விடுபேறடையும் நிலையைக்காட்டும் பெருங்காப்பியங்கள் போலன்றி இவற்றுள் ஒன்றோ சிலவோ குறைபடப் பாடியிருப்பின் அவற்றைச் சிறுகாப்பியங்கள் என்று கூறுவர். பண்டைய நாளில் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வகையறிந்துள்ளனர்.
யணகுமார காவியம்
காப்பிய அமைதியில்லா இந்நூல் உதயனான் கநை எனவும் பெயருறும். வங்கதேசத்து மன்னன் உதயணனின் கதையை விருத்தப்பாவில் ஆறுகாண்டம் 367 செய்யுள்கள் கொண்டு இந்நூலில் அமையப் பாடப்பெற்றுள்ளது.
நாக குமார காவியம்
இந்தால் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று; நூலாசிரியர் சமணத்தைச் சார்ந்தவர் என்பன தவிரப் பிற எந்தக் கருத்தும் தெரியவில்லை.
யசோதர காவியம்
உதயண குமார காவியத்தைக் காட்டிலும் நயமுனட்ய செய்யுள்களைக் கொண்டிருக்கும் நூலிது: ஆயினும் அணிநலன்கள் மிகுதியாய் இல்லை ஐந்து சருக்கங்களும் 330 பாடல்களும் கொண்டு தூய எளிய நடையில் விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. இந்நூலில் சுட்டப்பெற்றுள்ள சோழன் மாரித்தாள் பற்றிய குறிப்புகள் வேறு நூல்களில் காணப்பெறவில்லை.
சூளாமணி
இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர்; சமணம் சார்ந்த நூலிது. பன்னிரண்டு சருக்கங்கள் 2331 பாடல்களைக் கொண்டது. கி.பி.பத்தாம் நூற்றாண்டு; ஸ்ரீபுராணம், ஆருகத மகாபுராணம் ஆகிய வடமொழி நூலில் உள்ள திவிட்டன் விசயன் ஆகியோரின் கதையைக் கூறுகிறது. நிலவளம், நகரச் சிறப்புகள் அழகிய சுவையான பாடல்களால் கூறப்பட்டுள்ளன. முடிவில் துறவும் முக்தியும்விளக்கப்பட்டுள்ளன. விருத்தப்பாடல்களில் சில இடங்களில் திருத்தக்கதேவரையும் விஞ்சிவிடுகிறார்.
நீலகேசி
குண்டலகேசி என்னும் பெளத்த நூலுக்கு எதிராக எழுந்த சமண நூலிது. இது நீலகேசித் தெருட்டு என்றும் அழைக்கப்படும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதற்குச் சமய திவாகர வாமனமுனிவர் சமய திவாகரவிருத்தி' என்னும் உரை எழுதியுள்ளார்.
Comments
Post a Comment